Published:Updated:
சந்திரபிரபா
 
சந்திரபிரபா

‘சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-2’வின் இறுதிப்போட்டியில் பங்கேற்ற வர்களுக்கு ‘உணவே மருந்து’ என்ற தலைப்பு வழங்கப்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட சிறந்த ரெசிப்பிகளைச் சமைத்து அசத்தினர். அந்த உணவுகள் தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் உடல்நலனில் எத்தகைய மாற்றங்களையும், நன்மைகளையும் ஏற்படுத்தின என்பதையும் பகிர்ந்துகொண்டனர். அந்த வகையில் தேர்ந் தெடுக்கப்பட்ட சிறந்த ஆரோக்கிய ரெசிப்பி யோடு, அதைச் சமைத்தவர்களின் அனுபவங் களும் ஒவ்வோர் இதழிலும் இடம்பெறும். இந்த இதழில், ஈரோடு முத்தம்பாளையத்தைச் சேர்ந்த சந்திரபிரபாவின் ரெசிப்பியும் அனுபவங்களும்...

“எங்களுடையது விவசாய குடும்பம். நான் உயிர்வேதியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். 19 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினேன். என் பாட்டியும், அப்பாவும் நன்றாகச் சமைப்பார்கள். எனக்குச் சிறு வயதிலிருந்தே சமையலில் அதிக நாட்டம் அதிகம் என்பதால், ஹோட்டல் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. கொரோனா லாக்டௌன் காலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்து உதவினேன்.