Published:Today at 6 AMUpdated:Today at 6 AM

அர்ஜுன்
மக்களின் தீராத அன்பையும், நடிப்புக்கான சிறப்பான இடத்தையும், ஆக்ஷனுக்கான தனி இடத்தையும் ஒருசேரப் பெற்றவர் அர்ஜுன். ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்த பின்னர், இப்போதும் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவரும் தமிழ் ரசிகர்களின் ஆக்ஷன் கிங்கிடம் பேசினோம். மிகுந்த கனிவோடு இருந்தது அந்த உரையாடல்.
“ஒவ்வொரு படத்துலயும் வேலை பார்க்கும் போது முதல் நாள் பதற்றம் எனக்கு இப்போ வரை இருக்கும். நான் எப்பவும் மக்களை நம்புவேன். சிறந்த படம்னு நான் சொல்றதைவிட, மக்கள் அதைச் சொல்லணும்னு எதிர்பார்ப் பேன். கதையைக் கேட்டுட்டு நான் நிறைவோட பண்ணின படம், ‘பிளாஸ்ட்.’ ரொம்ப நாளைக்குப் பிறகு அபிராமியோடு சேர்ந்து படம் பண்றேன். பிரீத்தி முகுந்தன் நடிக்கிறாங்க. ஒரு பெண் தன் குழந்தைகளை எப்படி வளர்க்கணும்னு சில நல்ல விஷயங்கள் படத்தில் இருக்கு.
நான் நிறைய படங்களில் வீர தீரமா ஃபைட் பண்ணியிருக்கேன். அதையே அபிராமியும் ப்ரீத்தியும் செய்யும்போது நல்லா இருந்தது. ரசிச்சேன். அவங்க ரெண்டு பேரும் இந்தப் படத்தில் கடினமாக வொர்க் பண்ணியிருக்காங்க. அவங்க கராத்தேயெல்லாம் கத்துக்கிட்டு ஃபைட் செய்ததெல்லாம் பெரிய விஷயம். ரொம்பக் கஷ்டப்பட்டு பண்ணியிருக்காங்க. இப்பதான் கத்துக்கிட்டு பண்றது மாதிரி தெரியலை” என உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார்.



