மே 4-ம் தேதிதான் தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கின்றன என்றாலும், இப்போதே ஆட்சியைப் பிடித்துவிட்ட நம்பிக்கையில் பல்வேறு திட்டங்களைப் போடத் தொடங்கிவிட்டன மூன்று கழகங்களும். தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க என மூன்று கட்சிகளுமே அமைச்சர்கள் பட்டியலைத் தயார்செய்யத் தொடங்கியிருக்கின்றன. இவற்றில், அ.தி.மு.க-வும் த.வெ.க-வும் அதிகாரிகள் மாற்றத்துக்கும் லிஸ்ட் ரெடி செய்கிறார்கள். ‘யாருக்கு எந்த இலாகா... எந்தப் பதவி’ என்கிற பேச்சுதான், மூன்று கழகங்களிலுமே ஒலிக்கிறது. பதவியேற்பு விழாவுக்கான நாளையும் குறித்துவிட்டுக் காத்திருக்கின்றன இந்த மூன்று கட்சிகளும்.

“மூன்று கழகத்தினரும் என்ன திட்டத்தில் இருக்கிறார்கள்..?” களமிறங்கி விசாரித்தோம்.